1980 ஆம் ஆண்டளவில் நாளொன்றில் பதிவான உச்ச வெப்பநிலையை விட, உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வெப்பநிலை அதிகரிப்பானது இதுவரை உணரப்படாத இடங்களை விட மேலதிக இடங்களில் உண்டாகிறது எனவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
1980 மற்றும் 2009க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், வெப்பநிலை 50 டிகிரியை கடந்திருந்தது. எனினும் 2010 தொடக்கம் 2019க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 26 நாள்களாக நீடித்திருந்தது. தற்போது வெப்பநிலை 40 நாள்கள் வரை அதிகரித்துள்ளது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
புதைபடிம எரிபொருள்கள் எரியூட்டப்படுவதே இதற்கு 100 சதவீத காரணம் என பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளை ஆய்வு செய்யும் மூத்த அறிவியலாளர் வைத்தியர் பெட்ரிக் ஓட்டோ தெரிவித்துள்ளார்.
உலகில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் 50 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக சமுத்திர நீர்மட்டம் 2 மீற்றரால் உயர்வடைந்து சிறிய தீவுகள் மூழ்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது எனவும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.