தற்போது நடைமுறையில் உள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றீடாக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்த புதிய சட்ட வரைபு நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், இதில் உள்ள சில கடுமையான பிரிவுகள் குறித்துச் சிவில் சமூகத்தினர் ,சட்டத்தில் உள்ள பரந்த வரையறைகள் காரணமாக, பொதுமக்களின் நியாயமான போராட்டங்கள் மற்றும் சிவில் சமூகச் செயல்பாடுகள் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட வாய்ப்புள்ளது.
சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் இச்சட்டத்தின் கீழ் இலக்கு வைக்கப்படலாம்.
இலங்கை குடிமக்கள் வெளிநாடுகளில் வசித்தாலும், இச்சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது புலம்பெயர் சமூகத்தினரிடையே பெரும் சிக்கல்களை உருவாக்கும்.
சாதாரண சிவில் நடவடிக்கைகளைக் கூடக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கொண்டு வருவது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.