போதைப்பொருள் கடத்தல்காரர் ‘தெஹி பாலே’க்கு சொந்தமான ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள 5 மீன்பிடி இழுவைப் படகுகள் பறிமுதல்!

images 2 3

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹி பாலே” என்று அழைக்கப்படும் செஹான் சத்சாரவுக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஐந்து மீன்பிடி இழுவைப் படகுகளை (Trawlers) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) திக்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த இழுவைப் படகுகளின் மொத்தப் பெறுமதி சுமார் ரூபாய் 200 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் (Illegal Assets Investigation Division) இந்தப் படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தப் படகுகள் திக்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version