ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணை இறுதிக்கட்டத்தில்: விரைவில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் – சட்ட மாஅதிபர் அறிவிப்பு!

image c40cb1ef0e

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தி வரும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகச் சட்ட மாஅதிபர், கோட்டை நீதிவான் நெத்தி குமாரவுக்கு இன்று (நவம்பர் 19) தெரியப்படுத்தியுள்ளார்.

சட்ட மாஅதிபர் அறிக்கை: சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவின் செயலாளரின் சார்பாகப் பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை மீளப் பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்களை வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி, தனது மகளின் பிரசவத்தில் கலந்துகொள்வதற்காகவே வெளிநாட்டுப் பயணத் தடையைத் தளர்த்துமாறு செயலாளர் கோரியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version