ஜப்பானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சீனா தனது பிரஜைகளை எச்சரித்துள்ளது. ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) அண்மையில் தெரிவித்த கருத்துக்களால், இரு நாடுகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனாவால் தைவான் தாக்கப்பட்டால், ஜப்பான் இராணுவத் தலையீட்டைப் பரிசீலிக்கும் என்று ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி கூறியிருந்தார். அவரின் இந்தக் கருத்து, சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து கடுமையான பதிலடியைத் தூண்டியுள்ளதுடன், இரு நாடுகளுக்கு இடையே பதற்றங்களை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த இரண்டு நாடுகளும் பிராந்தியப் பயணத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.