நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில் பாரிய நிவாரண உதவியை வழங்குவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று (டிசம்பர் 1) அறிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (USD 1 மில்லியன்) நிவாரண உதவியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிகமாக 10 மில்லியன் யுவான் (Yuan) பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி உதவிகள், வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மற்றும் அவசர உதவிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

