இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா துணை நிற்கும் – சீன கம்யூனிஸ்ட் கட்சித் தூதுக்குழு உறுதி!

New Project 119

இலங்கையின் ‘மறுசீரமைப்பு’ (Rebuilding Sri Lanka) திட்டத்திற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தூதுக்குழு தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாங் ஜுன்செங் (Wang Junzheng) தலைமையிலான தூதுக்குழுவினர், நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். இச்சந்திப்பின் முக்கிய விடயங்கள் வருமாறு:

அண்மைய அனர்த்தங்களின் போது சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் வெற்றிகரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குச் சீனா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்வதுடன், புதிய பொருளாதாரத் திட்டங்களை ஆரம்பிக்கவும் சீனா ஒத்துழைக்கும் என வாங் ஜுன்செங் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அண்மைய சீன விஜயத்தின் போது ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டின. இச்சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங் (Qi Zhenhong), அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Exit mobile version