அண்மைக்காலமாக, இடம்பெற்று வரும் ஒன்லைன் முறை கல்வியால் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் எனவும், பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாப்பான முறையில் மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய நிலைபாட்டை மேற்கொள்ள வேண்டும். பாடசாலைகளை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்கள் மத்தியில் பரவி வரும் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த பாடசாலைக் கல்வியே சிறந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews