அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள வெதர்போர்டு (Weatherford) நகரில் இருக்கும் நட்சத்திர விடுதி (Hotel) ஒன்றில் இரசாயன வாயு கசிவு ஏற்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த உணவகத்துக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் (Parking Lot) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பாரவூர்தியில் (Truck) இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலத்தால் சூழப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், பாதிக்கப்பட்ட 36 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்தும் அப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

