மதுபான போத்தல்களில் ஜனவரி 3ஆம் திகதி முதல் புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுமென கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் கபில குமாரசிங்ஹ தெரிவித்தார்.
இதன்மூலம் திறைசேரிக்கான வருவாயை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்
புதிய ஸ்டிக்கர் அடங்கிய மதுபான போத்தல்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர், சந்தையில் தற்போது இருக்கும் ஸ்டிக்கர் இல்லாத மதுபான போத்தல்களை நிறைவுச் செய்வதற்கான காலம் ஏப்ரல் 1ஆம் திகதி வரையிலும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் சந்தைக்கு விநியோகிக்கப்படும் சகல மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews