முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காகத் தனது உடைமைகளை மூட்டை கட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நவம்பர் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தார்.
எனினும், அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது உடைமைகளைப் பிரித்து வருவதாகவும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அவர் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஏற்கனவே வெளியேறி தங்காலைக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.