முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், குறித்த செய்திகள் உத்தியோகபூர்வமற்றவை மற்றும் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பும் அற்ற நிலையில் இந்தத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாகத் தென்னிலங்கையில் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனடிப்படையில், இவ்வாறான போலியான செய்திகள் மற்றும் வதந்திகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.