நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த இது குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், மின்சக்தித் துறையுடன் தொடர்புடைய அனைத்துப் பங்காளிகளுடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் போது ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அவர்களால் முன்வைக்கப்பட்ட நலன்புரி விவகாரங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, சாத்தியமான அனைத்து விடயங்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மின்சாரத் துறையின் அபிவிருத்தி என்பது நாட்டின் தேசிய முன்னுரிமை மிக்க விடயமாகும்.
தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு இந்த மறுசீரமைப்பு இன்றியமையாதது என்பதால், இதற்கு ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என மின்சார சபை நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.