தேர்தல் வேட்பாளர்கள் மீது வழக்கு: ஆணைக்குழுவிடம் பொலிஸ் அறிவிப்பு

Sri Lanka vote polls f7e68bf67c9e707d0d548795e0b5e2cb

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத 2,000 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்னாயக்க இந்தத் தகவலை சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளில் பின்வருவோர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் 13 பேர். நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் 1,700 இற்கும் மேற்பட்டோர்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version