டெல்டா பரவலை விட பல மடங்கு வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று காரணமாக பண்டிகைக் கொண்டாட்டங்களை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
பெருந்தொற்று காலத்தில் அனைவரும் சோர்வடைந்துள்ளதால் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களை உறவினர்களுடன் கழிக்கவே விரும்புகின்றோம்.
ஆனால் இத்தகைய சந்தர்ப்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படலாம்.
ஆகவே, பண்டிகைக் கொண்டாட்டங்களை ஒத்தி வையுங்கள் அல்லது ரத்து செய்யுங்கள் என்று உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரஸ் அதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#WorldNews