இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு கனடா 1 மில்லியன் டொலர் நிதியுதவி அறிவிப்பு!

23 63baa69a1babd

இலங்கையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் வெள்ளப் பேரழிவுக்கு அவசர நிவாரணமாக, கனடா தனது ஆரம்ப கட்ட மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் கனடிய டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிதியுதவி நம்பகமான சர்வதேச பங்காளர்கள் மூலம் தற்காலிக கூடாரங்கள், தூய்மையான குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்க பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.

கனடா, இலங்கையின் நிலைமையை நெருக்கமாகக் கவனித்து வருவதாகவும், தேவைகள் அதிகரிக்கும்போது தொடர்ந்தும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

“இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதில் கனடா உறுதியாக உள்ளது. மனிதாபிமான சவால்களை சமாளிக்க சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து செயல்படுவோம்,” என கனடா வலியுறுத்துகிறது.

இலங்கையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version