பணவீக்க இலக்கை எட்டத் தவறிய மத்திய வங்கி: நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானம்!

23 6496dd9c83a26

பணவீக்க இலக்குகளை எட்டத் தவறியமை குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்குகளைத் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் எட்டத் தவறினால், அது குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் 5% ஆக இருக்க வேண்டிய பணவீக்கம், முறையே -1.1% மற்றும் 0.8% ஆகக் குறைவடைந்துள்ளது.

அத்துடன் அது தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளுக்கான பணவீக்க இலக்குக்கு 2% இற்கு கீழ் நிலவுகின்றது.
எனவே இது தொடர்பில் மத்திய வங்கி தயாரித்துள்ள அறிக்கையைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நிதியமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version