கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் (A-009) நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மஹையாவ புகையிரத வீதிக்குக் கீழே புதிய கொங்கிறீட் சுரங்கப் பாலம் (Concrete Box Underpass) ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A-009) மஹையாவ புகையிரத கடவைக்குக் கீழ் பகுதியில் இந்தச் சுரங்கப் பாலம் அமையவுள்ளது.
தேசிய போட்டி விலைமனு கோரல் அடிப்படையில், இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் M/s. NEM Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிர்மாணப் பணிகளுக்காக வரிகள் நீங்கலாக 699.58 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மஹையாவ பகுதி புகையிரத கடவை காரணமாகக் கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தச் சுரங்கப் பாலம் அமைக்கப்படுவதன் மூலம் புகையிரத சமிக்ஞை நேரங்களில் ஏற்படும் வாகன நெரிசல் முற்றாகத் தவிர்க்கப்படும்.
கண்டி – யாழ்ப்பாணம் வீதியூடான போக்குவரத்து நேரடித் தடையின்றி வேகமாகும், கரப் பகுதிகளில் எரிபொருள் வீணாவது குறைக்கப்படும்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.