25 694a8ad22f8c4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ நிறுவனத்திற்கு 6.6 லட்சம் புதிய காலி சிலிண்டர்கள் கொள்வனவு: அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

Share

லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனத்திற்குப் புதிய காலியான எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (23.12.2025) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, குறைந்த ஏலத்தை சமர்ப்பித்த சஹமிட் மெட்டல் ப்ரஷர் (Sahamitr Pressure Container PLC) நிறுவனத்திடம் இருந்து நான்கு வகையான சிலிண்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

அமைச்சரவை ஒப்புதலின் அடிப்படையில், 23 கிலோகிராமில் 20,000 சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளன.

இதேவேளை, 5 கிலோகிராமில்185,000 சிலிண்டர்கள் , 25 கிலோகிராமில் 450,000 சிலிண்டர்கள் மற்றும் 37.5 கிலோகிராமில் 7,000 சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் நிலவும் எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், பழைய சிலிண்டர்களுக்குப் பதிலாகப் புதிய பாதுகாப்பான சிலிண்டர்களை விநியோகிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 662,000 புதிய சிலிண்டர்கள் லிட்ரோ நிறுவனத்தின் கையிருப்பில் விரைவில் இணையவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...