இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரங்களை (Italian Driving Licenses) வழங்குவதற்கான திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (நவம்பர் 24) இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார்.
இந்த முன்மொழிவுக்கு அதே நாளில் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
இந்தத் திட்டம் இத்தாலிக்கான இலங்கைத் தூதருக்குத் தெரிவிக்கப்படும். மேலும், இத்தாலியில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்குப் பொறுப்பான நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தச் செயல்முறையை முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.