இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம் மற்றும் நிர்மாணத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகளுக்காக ஆட்களை இணைத்துக்கொள்வது தொடர்பான நடைமுறைப்படுத்தல் திட்டங்கள் ஏற்கனவே அவ்வப்போது கையெழுத்திடப்பட்டிருந்தன.
தற்போது, இஸ்ரேலிய அரசாங்கம் விடுத்த உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கிணங்க, மேலதிகமாக வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளிலும் (Trade and Services sectors) இலங்கைப் பணியாளர்களை இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த விருப்பத்திற்கு இணங்க, குறித்த புதிய துறைகளில் இலங்கைப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான மற்றும் நடைமுறைப் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை தனது முழுமையான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானம் அதிகரிப்பதோடு, இலங்கையர்களுக்குக் கூடுதல் சர்வதேச வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

