யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்: ரூ. 170 மில்லியன் ஒதுக்கீடு – வடக்கு மாகாணத்தில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாடு!

image b0c60eadfa

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கு (Indoor Stadium) ஒன்றை நிர்மாணிப்பதற்காக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக் தலைமையில் கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலச் சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வரும் வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலும் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து (Table Tennis), டென்னிஸ், பூப்பந்து (Badminton), வலைப்பந்து (Netball), சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கு, 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

Exit mobile version