வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு: திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிலே வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக தெரியவருவதாவது, திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் உள்ள ஆண்டாங்குளம் பகுதியில் இச்சம்பவம் இன்று அதிகாலை பாதுகாப்பு வேலி வெட்டப்பட்டு, கதவு உடைக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது,

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,

அங்கு சிகரெட் மற்றும் பணம் போன்றவை திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைரேகை நிபுணர்களின் உதவியுடனும் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.efdrgggg

Exit mobile version