ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

25 68f4c824ac515

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சாரணர் குழுவொன்று, படுவத்தை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஜம்போரி நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து வீதியோரத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததன் காரணமாக விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டாலும், பேருந்தின் தடுப்பான் (Brake) செயலிழந்தது விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 மாணவர்கள் பயணித்திருந்தனர். ராகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version