ரி.-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா பெண் ஒருவரின் கைபையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பெண் கண்டி தலதாமாளிகைக்கு வருகை தந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பெண் தற்போது களுத்துறையில் வசித்து வருபவர் என்பது தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் பொலிஸ் அதிகாரி என்பதும், 5 வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
#SriLankaNews