யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

images 2 6

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டுக் கடலில் போட்ட சிலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மியன்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாகக் கடலில் விடப்படும் மூங்கிலாலான தெப்பங்கள், கடந்த காலங்களில் வடமராட்சிப் பகுதிகளில் கரையொதுங்கி இருக்கின்றன.

அவ்வாறே குறித்த சேதமடைந்த சிலையைக் கடலில் போட்ட நிலையில், அந்த சிலை வளலாய் பகுதியில் கரையொதுங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த சிலை தற்போது வளலாய் கடற்றொழிலாளர் சங்கக் கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சிலை கரையொதுங்கியமை தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version