உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World Tour) ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்தியாவுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்திய உறுப்பினர் ‘வி’ (V): கடந்த 27-ம் திகதி நேரலை நிகழ்ச்சியில், குழுவின் உறுப்பினர் கிம் டேஹியுங் (Kim Taehyung – V), “நமஸ்தே இந்திய ஆர்மி, அடுத்த ஆண்டு சந்திப்போம்” என்று கூறி இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
BTS-இன் ஏழு உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) தங்களின் கட்டாய இராணுவப் பணியை முடித்துவிட்டு தற்போது புதிய ஆல்பம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2026 மே முதல் டிசம்பர் வரை உலகம் முழுவதும் சுமார் 60 முதல் 65 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
BTS-இன் முகாமைத்துவ நிறுவனமான HYBE, கடந்த செப்டம்பர் 2025இல் மும்பையில் ‘HYBE India’ என்ற தனது கிளையைத் தொடங்கியது. இது BTS போன்ற சர்வதேசக் குழுக்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த இசைப்பயணத்தின் துல்லியமான திகதிகள் மற்றும் இடங்கள் குறித்து அவர்களது நிறுவனமான BIGHIT MUSIC இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.