எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிடச் சென்ற பிரிட்டிஷ் பெண் ஒருவர், சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய கெதரின் எலிஸ் என்பவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை (18) குறித்த மலைப் பகுதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சுமார் 50 அடி பள்ளத்தில் அவர் தவறி விழுந்துள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், எல்ல ‘980 ஹோட்டல்’ (98 Acres Resort) மீட்புக் குழுவினர் மற்றும் எல்ல பொலிஸார் இணைந்து துரிதமாகச் செயற்பட்டுப் பெண்ணை மீட்டனர்.
படுகாயமடைந்த அவர் உடனடியாகப் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அண்மையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மலைப் பகுதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எல்ல பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

