நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு பாலம் இன்று (நவம்பர் 30) இடிந்து விழுந்துள்ளது.
யக்கல ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகில் உள்ள பாலத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பாலத்தை மீளச் சீரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.