அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங் ஸ்கேனை சீனாவின் தியான்ஜின் பல்கலைக்கழக (Tianjin University) விஞ்ஞானிகள் உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.
இந்த MRI ஸ்கேன் ஆனது, மூளை-கணினி இடைமுக (BCI) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடியது. இது கடுமையான நரம்பு நிலைகளைக் கண்காணிக்கவும் மற்றும் மன ஆரோக்கியத்தை மதிப்பிடவும் உதவக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் புதிய தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பதாவது,மருத்துவர்கள் மூளையின் நரம்பு செயல்பாடுகள், இரத்த ஓட்டம் மற்றும் திசு மாற்றங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும்.
இதன் மூலம், அல்சைமர் (Alzheimer’s), பார்கின்சன் (Parkinson’s), பக்கவாதம் (Stroke) போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.