மீண்டும் திறக்கப்பட்டுள்ள எல்லைகள்

Boundaries between Singapore and Malaysia

Boundaries between Singapore and Malaysia

மீண்டும் சிங்கப்பூர்க்கும் மலேஷியாக்கும் இடையேயான எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் – மலேசியாவுக்கும் இடையிலான எல்லை, முறையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு காரணமாக சிங்கப்பூர் – மலேசியா எல்லைகள் 2020 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் மூடப்பட்டன.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நாள்தோறும் சுமார் 300,000 மேற்பட்ட மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்வதுடன், இவ் எல்லையானது உலகின் பரபரப்பான எல்லைப் பகுதியாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லையை மீண்டும் திறக்கும் நிகழ்வை சம்பரதாய பூர்வமாக அறிவிக்கும் வகையில் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், சிங்கப்பூர் சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், புதிய சுகாதார வழிகாட்டல்களின் கீழ், 1,440 பயணிகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை, குடியுரிமை, வதிவிட விசா அல்லது நீண்ட காலம் தங்கியிருக்கும் விசாக்களை கொண்டவர்கள் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரொன் வைரஸ் பரவும் இந்நிலையில் இவ் எல்லைகளை திறப்பது அபாயமானதென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

#WORLD

Exit mobile version