திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

539661 trisha mks

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (நவம்பர் 05) சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அந்த மின்னஞ்சலில், சென்னையில் உள்ள நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாகச் சோதனை நடத்தினர்.

தீவிரச் சோதனைக்குப் பிறகு, இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.

மிரட்டல் விடுத்த நபர் குறித்துச் சென்னை காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version