கடற்தொழிலாளர்கள் இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு!

DSC 1511

நேற்றைய தினம் மன்னார் கோந்தைப்பிட்டி கடற்கரையில் இரு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

யாழ். பருத்தித்துறை கடற்தொழிலாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். படகில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இவ்விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மூவர் பயணித்த படகில் இருவர் கடலில் மூழ்கியுள்ள நிலையில் ஒருவர் பிரதேச மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இருவரில் ஒருவரின் சடலம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் மற்றையவரின் சடலத்தை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

#SriLankaNews

Exit mobile version