கொழும்பு – களனிப் பாலத்திற்கு கீழிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. தொடவத்தை சேதவத்தை கறுப்பு பாலத்திற்கு அருகில் அடையாளம் காணப்படாத நிலையில், பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் குறித்த பெண்ணின் சடலம் அந்தப்பகுதியிலேயே காணப்பட்டுள்ளதுடன், இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற கிரான்ட்பாஸ் பொலிசார், குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இன்று அதிகாலை தொடகல விக்ரோரியா பாலத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இருவருடைய சடலங்கள் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் அமல் ஜெயமான்ன தெரிவித்துள்ளார்.
Leave a comment