மீண்டும் மசூதியில் குண்டு வெடிப்பு !!

Afghanistan

Afghanistan

ஆப்கான் உள்ள மசூதியில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆப்கானின் நங்கர்ஹாரில் மசூதியில் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர்.

ஆப்கான் நங்கர்ஹாரில் உள்ள மசூதியில் இன்று காலை தொழுகையின் போது திடீரென குண்டு ஒன்று வெடித்தது.

இந்த சம்பத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்குள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு நங்கர்ஹாரில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version