மிகைக் கட்டண வரி விதிக்கப்படவுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 9 நிதியங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போதே நிதி அமைச்சரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகைக் கட்டண வரி விதிப்புமூலம் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் கைவைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
எதிர்க்கட்சிகளும் இது தொடர்பில் தகவல்களை வெளியிட்டிருந்தன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#SrilankaNews