நாய் இறைச்சிக்கு தடையா?-கிளம்பியது எதிர்ப்பு

Dog meat

தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தென் கொரிய அரசாங்கம் நாய் இறைச்சி விற்பனையைத் தடை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதை அங்கு நாய் பண்ணைகள் வைத்திருக்கும் பண்ணையாளர்கள் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

நாய்களை உண்பதால் ஆண்மையைப் பெருக்கலாம் என்ற நம்பிக்கை தென்கொரியாவில் பல நூற்று வருடங்களாக இருந்து வருகிறது.

இதனால் அங்கு பலர் நாய் இறைச்சி விரும்பி உண்கிறார்கள் .

எனினும் தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இடையில் நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த வருடம் முதல் நாய் இறைச்சியின் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பாக பல இலட்சக்கணக்கான நாய்கள் உணவுக்காக கொல்லப்பட்ட நிலையில், இவ் வருடத்தில் சுமார் 10 – 15 இலட்சம் நாய்கள் மட்டுமே கொல்லப்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு விலங்கு நல ஆர்வலர்களும் நாய்களை கொல்ல வேண்டாமென அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர்.

இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே – இன் அறிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பை பண்ணையாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

எதிர்ப்புக்கள் வந்தாலும் நாய் இறைச்சி விற்பனை தடை தொடர்பில் குழு ஆராயுமென தென் கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

 

Exit mobile version