01 32
செய்திகள்உலகம்

பங்களாதேஷில் பேருந்து ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்து: உயிரிழப்பு 24 ஆக அதிகரிப்பு!

Share

பங்களாதேஷின் ராஜ்ஜாரி (Rajbari) மாவட்டத்தில் உள்ள தௌலத்டியா (Daulatdia) படகுத் துறையில் நேற்று (மார்ச் 25, 2026) இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. குஷ்டியா மாவட்டத்திலிருந்து தலைநகர் டாக்காவை நோக்கி சுமார் 40 முதல் 50 பயணிகளுடன் பயணித்த குறித்த பேருந்து, ஆற்றுக்கடவைக்காகப் படகில் ஏற முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து பத்மா (Padma) ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. மழையுடனான சீரற்ற காலநிலை மற்றும் ஆற்றில் நிலவிய கடும் நீரோட்டம் காரணமாக மீட்புப் பணிகள் சவாலானதாக அமைந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், கடற்படையினர் மற்றும் சுழியோடிகள் இணைந்து சுமார் 30 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த பேருந்தை ஆறு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு ‘ஹம்சா’ (Hamza) என்ற மீட்புக் கப்பலின் உதவியுடன் மீட்டனர். பேருந்திற்குள்ளிருந்து மாத்திரம் 22 சடலங்கள் மீட்கப்பட்டதுடன், சிகிச்சையளிக்கப்பட்டு வந்த இருவர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 24 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 11 பெண்கள், 5 சிறுவர்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாகத் தீயணைப்பு சேவை அதிகாரி தல்ஹா பின் ஜாசிம் (Talha Bin Zasim) உறுதிப்படுத்தியுள்ளார்.

பேருந்து படகில் ஏறச் சென்ற போது, மற்றொரு சிறிய படகு மோதியதால் ஏற்பட்ட அதிர்விலேயே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின் போது 11 பயணிகள் நீந்தித் தப்பிய போதிலும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் தேடுதல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...