மூங்கிலாறு சிறுமி மரணம் – 5 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

21 61c2e439814c5

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த ஐந்து பேருக்கும் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் 18ஆம் திகதி அவரது வீட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் பின்னணியில் சிறுமியின் தாய் ,தந்தை ,சகோதரி, சகோதரியின் கணவன் ,மைத்துனர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#LocalNews

 

Exit mobile version