விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர், ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கஸ்ஸப தேரருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, இரத்தப் பரிசோதனை மற்றும் மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாகப் பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட ஐந்து பிக்குகள் மற்றும் ஆறு சந்தேக நபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
விளக்கமறியல்: இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரும் எதிர்வரும் ஜனவரி 28-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தேரர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட விஹாரையில் ஏற்பட்ட பதற்றநிலை மற்றும் கைது நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.