சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘சிறுவர்களை வீட்டுத் தொழிலுக்கு அமர்த்துவதை நிறுத்து’ என்னும் தொனிபொருளில் டயகம தோட்டம் 5 ஆம் பிரிவில் விழிப்புணர்வு வீதி நாடகமும், கவனயீர்ப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலியின் மரணம் தொடர்பில் உடனடியாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது.
கல்வி பிரச்சினைகள், காணி தொழிலாளர் பிரச்சினைகள், சிறுவர் பெண்கள் உரிமை சார்ந்த விடயங்கள் மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு சார்ந்த பதாகைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்ததுடன் தங்களின் பங்களிப்பையும் நல்கி இருந்தனர்.
#SriLankaNews