முதலாவது T20 கிண்ணத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

T20

ஆஸ்திரேலியா தனது முதலாவது T20 கிண்ணத்தை கைப்பற்றியது.

நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி T20 உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

T20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிக் கொள்ளும் இறுதி ஆட்டம் துபையில் இன்று இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து 4 இலக்குகள் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.

ஜிம்மி நீஷம் 13, டிம் செய்பெர்ட் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 3 இலக்குகளை கைப்பற்றினார்.

ஆடம் ஷம்பா ஒரு இலக்கை வீழ்த்தினார்.

173 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து மிட்சேல் மார்ஸ் மற்றும் டேவிட் வார்னர் கூட்டணி அதிரடி காட்டியது.

3 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் விளாசியிருந்த வார்னர் 38 பந்துகளுக்கு 53 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணியின் டிரென்ட் பெளல்ட் கேட்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக ஆடிய மிட்சேல் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என விளாசி தள்ளினார்.

அவருக்கு சரியான இணையாக களத்தில் இருந்த கிளென் மாக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

18ஆவது ஓவரில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

ஆஸ்திரேலியாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல்முறையாக T 20 உலகக் கோப்பையை அணி வென்றிருக்கிறது.கைப்பற்றியது.

#SPORTS

 

Exit mobile version