அங்குனுகொலபெலெஸ்ஸ சிறையில் பரபரப்பு: உணவுத் தட்டில் மறைக்கப்பட்ட கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

DSC 8266

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த கைதி ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர், தெவுந்தர விஷ்ணு தேவாலயத்துக்கு அருகில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சகோதரன் ஆவார்.

சிறைச்சாலையில் உள்ள உணவுத் தட்டில் (Food Plate) மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் உடனடியாகத் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் உள்ள பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version