ஈராக் பிரதமர் குறி வைத்து அவர் வீடு மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
நேற்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் வீட்டினை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் நடத்திய கொலைமுயற்சியில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இதுதொடர்பாக, ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
#WORLD