அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
வருடாந்திர தகவலை எவ்வாறு புதுப்பிப்பது?
பின்வரும் முறைகளிலிருந்து இலகுவான முறையைத் தெரிவு செய்க.
இணைய அணுகல் உள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்க தொலை பேசியூடாக https://eservices.wbb.gov.lk உள் நுழைந்து,
உங்கள் QR தாளில் குறிப்பிடப்பட்டுள்ள HH எண் மற்றும் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தகவல் அமைப்பில் உள் நுழைந்து, தகவல் மீள் சாண்றுதழ்” மெனுவிற்குச் சென்று, உங்கள் குடும்பத் தகவலை உள்ளிட்டு புதுப்பிக்கலாம்.
அல்லது
உங்கள் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு அல்லது உங்கள் பகுதியில் உள்ள விதாதா வள மையத்திற்குச் சென்று, உங்கள் குடும்பத்தின் HH எண் மற்றும் தேசிய அடையாள அட்டை எண்ணைச் சமர்ப்பித்து, தொழில்நுட்ப உதவியைப் பெற்று தகவலைப் புதுப்பிக்கலாம்.
மேற்குறித்த தகவல்களை விண்ணப்பங்கள் மூலம் புதுப்பிக்கலாம். “வருடாந்த தகவல் புதுப்பிப்பு விண்ணப்பம் 2025″ பிரதேச கிராம உத்தியோகத்தர் அல்லது சமூச வலுவூட்டுகை உத்தியோகத்தரிடமிருந்து பெற்று, அதனை பூரணப்படுத்தி குறித்த உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் சமர்ப்பிக்கலாம்.
தகவலை புதுப்பிக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசேட விடயங்கள்
2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை. ஏனெனின் அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே மறு தகவல் கணக்கெடுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தகவல்களை மீண்டும் சரிபார்க்கும்போது, குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பாவனையில் உள்ள தொலைபேசி அத்தியாவசியம்.
அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்கள்/தனிநபர்களும் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பதில் பங்கேற்பது கட்டாயமாகும், மேலும் பங்கேற்காத குடும்பங்கள்/தனிநபர்கள் தொடர்ந்து வரும் ஆண்டில் அஸ்வெசும சலுகையைப் பெற தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
தகவல் புதுப்பிப்பது 2025.12.10 ஆம் திகதியன்று முடிவடைகிறது.
