கூட்டுஒப்பந்த விடயத்தில் மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையை காட்டி மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பது கூட்டுஒப்பந்தம் மாத்திரமே ஆகும். ஆனால் சிலர் கூட்டு ஒப்பந்தம் தேவையில்லையென கூறுகிறார்கள்.
தற்பொழுது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலை காரனமாக இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தை பொங்கல் விழா போன்ற நிகழ்வுகளை நடத்தாது நாம் கூறுவது எல்லாம், மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment