இந்தியாசெய்திகள்

சனாதனம் குறித்து பேசிய உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன்:  சத்யராஜ்

Share

சனாதனம் விவகாரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்றார்.

இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், உதயநிதி, தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு! சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என மோடி கருத்து
உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு! சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என மோடி கருத்து
அதுமட்டுமல்லாமல், உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்பட 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது இல்லத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் சென்றனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, “சனாதனம் விவகாரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி தெளிவாக பேசியுள்ளார். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன்.

எதிர்ப்புகளுக்கு பிறகு, ஒவ்வொரு விஷயத்திலும் அமைச்சர் உதயநிதி கையாளும் விதம் பெருமையாக இருக்கிறது” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...