பெகாசஸின் மீது ஆப்பிள் வழக்கு தொடுத்துள்ளது.
இந்தியாவின் பிரபலங்களின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டு கேட்பதற்கு இஸ்ரேல் நிறுவனமென்றின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் பயன்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்பிரச்சனையால் இந்தியாவின் நாடாளுமன்றமும் முடக்கியுள்ளதாக இந்தியாவின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐ போன்களில் சட்டதிற்கு விரோதமாக இஸ்ரேலின் என்எஸ்ஓ. நிறுவனத்துடைய செயலிகளை நிறுவதற்கு தடை செய்ய வேண்டுமெனவும் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு 75ஆயிரம் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக தரவேண்டுமெனவும் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்த ஆப்பிள் நிறுவனம் தங்களது வளர்ச்சி பொறுக்க முடியாமல் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் சதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
எங்களுடைய மென்பொருள் அரசங்கங்களுக்கு உதவி வருவதாகவும் தீவிரவாதிகளை,குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகவும்,தங்கள் ஆப்பிள் வட்டிகையாளர்களை குறி வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
#world