ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

Untitled 2025 11 11T193051.794

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து வடிவமைத்த புதிய ‘iPhone Pocket’ நவம்பர் 14ஆம் திகதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ஸி மியாகேவின் “a piece of cloth” என்ற எண்ணக்கருவால் உத்வேகம் பெற்று, இந்த ஐபோன் பை (Pocket) 3D-பின்னல் (3D-knitted) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது எந்தவொரு ஐபோனுக்கும் பொருந்தக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ரிப்பன் போன்ற திறந்த அமைப்பு (ribbed open structure), ஐபோனை முழுவதுமாக மூடும் அதே வேளையில், நீண்டு அதிகப் பொருட்களைச் சுமக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த கவர்ச்சிகரமான பை மஞ்சள், செம்மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு உள்ளிட்ட 8 நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த வடிவமைப்பானது, நவீன ஃபேஷனில் ஆர்வம் கொண்ட இளம் தலைமுறையினரை (Gen Z) கவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version