ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியது உண்மை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் யாரிடம் ஐ.எஸ் கொள்கை இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. இஸ்லாமிய இராச்சியம் உருவாக்கும் பயணத்தில் சாதாரண தமிழ் மக்கள் மற்றும் சிங்களவர்களை ஐ.எஸ் கொள்கைக்குள் இணைக்க முடியாது.
முஸ்லிம் மக்களை மாத்திரமே இலகுவாக ஐ.எஸ் கொள்கைக்குள் இணைக்க முடியும். ஆகவே, புலனாய்வுத்துறையைப் பயன்படுத்தி, தாக்குதல்கள் நடத்தப்படலாமா, போதனைகள் முன்னெடுக்கப்படுகின்றவா என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்கிறோம்.
அதன்படி,ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என்பதால் அது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.